Cotton Candy: “தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை..!" – தமிழ்நாடு அரசு உத்தரவு

Gridart 20240217 121017806.jpg

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பஞ்சு மிட்டாய்களில் `ரோடமின்-பி (Rhodamine-B)’ எனும் ரசாயனம் கலப்பதாகவும், இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களை அதிகளவில் உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வாய்பிருப்பதாவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை கடந்த கொண்டுவரப்பட்டது.

பஞ்சு மிட்டாய்

பின்னர், தமிழ்நாட்டிலும் அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமின்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் தற்போது பஞ்சுமிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமின்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v) – ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி ரோடமின்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப் பொருள்களைத் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *