9 அம்ச கோரிக்கைகள்… 6வது நாளாக தொடர்ந்த விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்!| visually challenged people continue their protest 6th day for 9 requests to govt

Screenshot 2024 02 17 13 33 38.png

இன்னொருபக்கம், போராட்டத்தில் ஈடுபடுவர்களை போலீஸார் கைது செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்தவே வேண்டுமே தவிர, திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடியாது. போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதற்கான இடங்களில் முறையாக போலீஸிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு, போலீஸ் அனுமதியளிக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடலாம். மேலும், சட்டப்படி அனுமதி பெற்று நடத்தக்கூடிய போராட்டங்களில் போலீஸார் அத்துமீறினால், நீதிமன்றம் அதில் தலையிடும்” என்று கூறியது.

விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இதற்கிடையில், சென்னை மெரினாவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், ஆறாவது நாளாக சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ் வளாகம் அருகே அண்ணா சாலையில் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *