தனித்தனியாகப் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் – வீழ்ச்சியா… வியூகமா?! | There is no seat sharing among India bloc parties… is it a strategy?

65b9fa75e3816.jpg

மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பகவந்த் மான் போன்றவர்களுக்கு பா.ஜ.க மீது பயம் இல்லையா, அல்லது, தனியாகப் போட்டியிட்டு, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் பா.ஜ.க பக்கம் போய்விட்டனர். அதனால், தற்போது தனித்துப் போட்டியிடப்போவதாக ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கும் நிலையில், அவரும் பா.ஜ.க கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பா.ஜ.க-வினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

ஆனால், அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தைப் பறித்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால், தேசிய மாநாடு கட்சி ஜம்மு காஷ்மீர் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்தக் குழப்பங்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமா என சந்தேகம் எழுப்பிகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி என்ன நிலைபாடு எடுக்கப்போகிறது என்பதை வைத்து தான், இது எத்தகைய பின்னடைவு அல்லது இதுவே தான் வியூகமா என்ற முடிவுக்கு வர முடியும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *