“இன்னும் எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள்தான் வேண்டும்; மோடியிடமே கேட்டேன்..!” – கார்கே பகிர்ந்த தகவல் | Talked to PM about intimidation of opposition leaders to their side: Mallikarjuna Kharge News

Modi Karge.jpeg

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கும் தங்களது கதவு திறந்திருப்பதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இப்பிரச்னை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியிடமே நேரடியாக கேட்டுவிட்டதாக கார்கே தெரிவித்திருக்கிறார். புனே அருகில் உள்ள லோனவாலாவில் நடந்த காங்கிரஸ் தொண்டர்களின் பயிற்சி கூட்டத்தில் பேசிய போது மல்லிகார்ஜுன் கார்கே இதனை தெரிவித்தார். அவர் அதில் மேலும் பேசுகையில், “‘நாடாளுமன்றத்தில் தேநீர் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டிருந்தார்.

அவரிடம் எத்தனை முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்களை உங்களது அணிக்கு இழுக்கப்போகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவுதான் வேண்டும் என்று கேட்டேன். உடனேஅவர், `அவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்தால் நான் என்ன செய்ய முடியும்?’ என்று பிரதமர் பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர்களை பயமுறுத்தி இழுப்பதாக நான் தெரிவித்தேன். ஆனால் எங்களது அரசின் செயல்பாடுகளை பார்த்து அவர்கள் வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

கட்சியை விட்டு ஓடிய தலைவர்களை கட்சி தொண்டர்களும் வாக்காளரும் தான் பெரிய தலைவர்களாக மாற்றினர். அப்படி இருக்கும் போது அத்தலைவர்கள் கட்சியை விட்டு ஓடுவது கோழைத்தனமானது. நாம் பயப்படக்கூடாது. பயந்துவிட்டால் நம்மை அழித்து விடுவார்கள். நாம் எதிர்த்து போராடினால்தான் நம்மால் வாழ முடியும். ஒரு நாள் நமக்கு வெற்றி கிடைக்கும். அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து பா.ஜ.க-வுக்கு எதிராக போராடவேண்டும். கடந்த 10 ஆண்டில் பிரதமர் மோடி பொய் சொன்னதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மக்கள் அவருக்கு ஆதரவளித்தால் நாடு பேரிழப்பை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *