Durai Vaiko Lashes out at BJP | இது சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது: கோவையில் துரை வைகோ

367893 Vaiko.jpg

Coimbatore: கோவை காந்திபுரம் மதிமுக அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின்  பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “தேர்தல்  பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ளன. தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு  கொடுத்த சம்மட்டி அடியாக இதைப் பார்க்கிறேன். 

12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 6,500 கோடி ரூபாய் பா.ஜ.க பெற்றுள்ளது. 90 விழுக்காடு நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக வாங்கி இருக்கின்றது. மீதமுள்ள தொகையினை 30 க்கும் மேற்பட்ட கட்சிகள் வங்கி இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்” என்று தெரிபித்தார். 

நிருபர்களிடம் தொடர்ந்து பேசிய துரை வைகோ, “மத்தியில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சிகள் மட்டும் ஒரு தரப்பாக தேர்தல் பத்திரம் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கின்றோம். 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது , மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. அதிமுக பாஜகவை எதிர்ப்பதை  வரவேற்கின்றோம். பா.ஜ.க எதிர்ப்பை அடுத்து வரக்கூடிய காலத்தில் மக்களும் அதை நம்ப வேண்டும். நாங்களும் நம்ப வேண்டும். மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக மதிமுக கூட்டணி உருவாக்கியது. 

இது சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது. யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம். இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை  தொகுதி வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம்.” என்றார்.

மேலும் படிக்க | மு.க. அழகிரி விடுதலை… வட்டாட்சியரை தாக்கிய வழக்கு – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!

“கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம். நாட்டில் பாதுகாப்பிற்கு மோடி அரசு தேவை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். 2014 முதல் தறபோது வரை 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் மீது  கண்ணீர் புகை கொண்டு வீசி கடுமையான அடக்குமுறை செய்து கொண்டு இருக்கின்றனர். 

மத அரசியலை வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கின்றது. விவசாயிகள் உயிரிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதனால் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் திராவிட இயக்க கொள்கைகளால் தான் படிப்பறிவு, கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில்  கோலோச்சி  கொண்டிருக்கின்றனர். 

வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக   இங்கே வருகின்றனர். பாஜக சொல்வதை போல திராவிட இயக்க கொள்கைகளால் தமிழ்நாடு பாழாகி போனது என்றால், வட மாநிலத்திலிருந்து ஏன் இங்கே பிழைப்பு தேடி வருகின்றனர் ? நாட்டை இவர்களிடம் இருந்துதான் பாதுகாக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு காரணம் பாஜக” என மதிமுக தலைமை நிலைய நிர்வாகி துரை வைகோ மேலும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | ’தலைவர் is back’ ஜாமீனில் வெளியே வந்து ஆடியோ வெளியிட்ட Myv3ads நிறுவனர் சக்தி ஆனந்த்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *