புதிய பேருந்து நிழற்குடையில் தோன்றிய நீரூற்று… வைரல் வீடியோவால் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

Img 20240215 Wa0021.jpg

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் மறையூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை சமீபத்தில் திறப்பு விழா கண்டது. இந்நிலையில் மக்களின் பயன்பாட்டுக்காக, திறந்துவைக்கப்பட்ட அந்த பேருந்து நிழற்குடையின் தரை தளத்திலிருந்து நீருற்று போல தண்ணீர் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறியது. பணிகள் முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட நிழற்குடையில் சில நாட்களிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பேருந்து நிழற்குடை உள்மாவட்டத்தில் பேசு பொருள் ஆனது.

மேலும், நீரூற்று போல நீர் பாயும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, பாதிப்பை சரிசெய்யும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

பாய்ந்தோடும் வெள்ளம்

அதனை தொடர்ந்து, பேருந்து நிழற்குடையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் பணியில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்‌ மற்றும் ஏனைய பிற அதிகாரிகளும் ஈடுபட்டனர். இந்தநிலையில், பேருந்து நிழற்குடை கட்டமைப்பு விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு, தவறான இடத்தை தேர்வு செய்து வேலை உத்தரவு வழங்கிய நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், வளர்ச்சி பணிகளை முறையாக கண்காணிக்க தவறிய இளநிலை பொறியாளர் ஆகிய இரண்டு பேரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

நிழற்குடை

மேலும் நிழற்குடைக்கு தவறான தொழில் நுட்ப அறிக்கை தயார் செய்த உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), கூட்டுக்குடிநீர் குழாயின் மேல் நிழற்குடை அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், நிழற்குடை ஒப்பந்த பணி செய்த ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியலுக்கு மாற்றவும் பரிந்துரைந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *