தோடர் எம்பிராய்டரி கோட், பழங்குடிகளுடன் பாரம்பர்ய நடனம்! – கவர்னர் ரவியின் ஊட்டி விசிட் அப்டேட்ஸ்! | governor r n ravi ooty visit updates

Img 20240216 Wa0030.jpg

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ஆளுநரின் அதிகாரபூர்வ மாளிகையான ராஜ்பவன், ஊட்டியில் அமைந்திருக்கிறது. ஆளுநர்கள் ஓய்வு மற்றும் அலுவல்களையும் ஊட்டி ராஜ்பவனில் இருந்து மேற்கொள்வது வழக்கம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாடு கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி ராஜ்பவனில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பயணங்கள் ரத்தானது.

இந்நிலையில், மூன்று நாள்கள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார்.

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

ஊட்டி அருகில் உள்ள தோடர் பழங்குடி மக்களின் கிராமமான முத்தநாடு மந்திற்கு மனைவியுடன் இன்று சென்ற அவர், தோடர் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகளான உணவு, வழிபாடு, நடனம், கலாசாரம், கால்நடை வளர்ப்பு போன்றவைக் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். தொடர்ந்து பழங்குடி மக்கள் அன்பளிப்பாக அளித்த தோடர் எம்பிராய்டரி கோட் அணிந்து பழங்குடி ஆண்களுடன் பாரம்பர்ய நடனமாடி மகிழ்ந்தார். நாளை ஒருசில நிகழ்வுகளில் பங்கேற்கும் ஆளுநர், ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பவிருக்கிறார். நடப்பு ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் பாதியில் வெளியேறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஆளுநருக்கான‌ பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *