`தன்னிச்சையாகச் செயல்படுகிறார்’ – சேலம் செளடேஸ்வரி கல்லூரி தாளாளர்மீதான குற்றச்சாட்டும், விளக்கமும்! | Salem Sowdeswari College controversy

1648708072707.jpg

பாலமுருகன்

பாலமுருகன்
பல்கலைக்கழக ஆசிரியரகள் சங்கத் தலைவர்

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பாலமுருகனிடம் பேசியபோது, “சேலம் சௌடேஸ்வரி கல்லூரி தாளாளர் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடிந்த பிறகும், தன் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்வதும், பொருந்தாத விதி 17(b)-ன்படி ஆண்டு ஊதிய உயர்வுகளை நிறுத்தம் செய்தும் வருகிறார். `பணியிடை நீக்கம் என்பது தண்டனையன்று” எனச் சட்டங்கள் உள்ள நிலையில், பணியிடை நீக்கம் என்பது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மேற்கொள்வதற்காகவே செய்யப்பட வேண்டும். இதனை மீறி சேலம் சௌடேஸ்வரி கல்லூரி தாளாளர் செயல்படுகிறார்.

மேலும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள ஆசிரியர் ‘தொடர் இருமல் மற்றும் ஏப்பம்’ விட்டதற்காக அக்டோபர் 2022-ல் பொருந்தாத 17(b) விதியின்கீழ் மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து, 15 நாள்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரோ, அதே ஆசிரியர் டிசம்பர் 2023-ல் பெரியார் பல்கலைக்கழக மைய விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருக்கிறார். அப்போதும், அந்த ஆசிரியரின் பெயரை `ஊதியமில்லா விடுப்பு’ எனக் கூறி, மாத ஊதிய பட்டியலிலிருந்து நீக்கி, கல்லூரி தாளாளர் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார்.

சேலம் செளடேஸ்வரி கல்லூரி

சேலம் செளடேஸ்வரி கல்லூரி

தொடர் இருமல் மற்றும் ஏப்பம் என்பதனை `ஒழுங்கீனமான செயல்’ என்று கூறி, மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்துள்ளது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேல்முறையீட்டினை ஏற்றுக்கொண்டு, அக்டோபர் 2022-ல் பொருந்தாத 17(b) விதியின்கீழ் மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தத்தினையும், 15 நாள்களுக்கானப் பணியிடை நீக்கத்தினையும் ரத்து செய்து, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாநிலத் தலைவர் என்ற முறையில் தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரிடம் சட்டம் மற்றும் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் சேலம் சௌடேஸ்வரி கல்லூரி தாளாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டுள்ளார் அந்த ஆசிரியர். கல்லூரிச் தாளாளர் எந்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்துள்ளாரோ அந்த ஆசிரியர்தான், குறிப்பிட்ட கல்வியாண்டில் 70 சதவிகிதத்துக்கும் மேலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்துள்ளார். தற்போது மாணவிகளை மிரட்டி, அந்த ஆசிரியரின்மீது ‘பாடம் நடத்தும் திறமையற்றவர்’ என்று குற்றம் சுமத்த வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே இருந்த கல்லூரி முதல்வரை எடுத்துவிட்டு, தகுதியற்ற முதல்வரை நியமித்துள்ளனர். மேலும் பெண் பேராசிரியர்களை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற செயல்களில் கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பாகப் புகார் அளித்துள்ளோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *