ஜோதிடம்

1200277.jpg

பொதுப்பலன்: யாக சாலை அமைக்க, மின்சார சாதனங்கள் வாங்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, கதிரறுக்க, சமையல் இணைப்பு பெற நல்ல நாள். மாரியம்மன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்தால், தடைகள் விலகி அனைத்து கனவுகளும் நிறைவேறும். மகாலட்சுமி ஸ்தோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், லலிதா சஹஸ்ர நாமம் படிப்பதால் செல்வம் பெருகும். மனம் அமைதி பெறும். சூரிய, சந்திரரை வழிபடுவதால் நன்மை ஏற்படும்.

மேஷம்: மனைவிவழி, தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்புகூடும். உடல் நலனில் கவனம் தேவை. நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு. பிள்ளைகள் படிப்புக்காக அலைய வேண்டியதிருக்கும்.

மிதுனம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்.

கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. வீண் குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்: முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். சோர்வு நீங்கி, முகப் பொலிவுடன் காணப்படுவீர். குழப்பம் தீர்ந்து தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு கிட்டும்.

கன்னி: எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி நிம்மதி பிறக்கும். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பழைய கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

துலாம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும்.

தனுசு: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாள வேண்டும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்.

மகரம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

கும்பம்: சகோதரிக்கு நல்ல இடத்தில் திருமணம் ஏற்பாடாகும். ஆடை, ஆபரணம் சேரும். இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மீனம்: தம்பதிக்குள் அடிக்கடி ஏற்படும் வீண் விவாதங்கள் விலகும். வாகனம் செலவு வைக்கும். வெளியூர் பயணம் திருப்தி தரும். நண்பர்கள், உறவினர் மத்தியில் மதிப்புகூடும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *