`அரசின் உறையப் படிக்க மாட்டேன் என ஆளுநர் கூறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?’ – மனோ தங்கராஜ் | minister mano thangaraj slams governor rn ravi

Screenshot 20240216 172606 2.png

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரி எப்போதுமே மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டம். இரண்டாவதாக ட்ராஃபிக் இங்கு ரொம்பவே அதிகம். எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் ஒரு திட்ட அறிக்கை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது இங்கு போடப்படுகின்ற சாலைகளின் கனத்தை அதிகப்படுத்தி போடுவதற்காக ஒரு திட்டத்தை நாங்கள் முதன் முதலாக எடுத்திருக்கிறோம். அதற்கு துறையினுடைய அமைச்சர் வேலு-விடம் சொல்லி இருக்கிறேன். அவரும் அந்த அறிக்கையை கேட்டிருக்கிறார். அதை நாங்கள் தயார் செய்து அடுத்த ஆண்டு முதல் போடுகின்ற சாலைகளுக்கு கனத்தை அதிகரிக்க முடியுமா என்று பார்க்கிறோம். தண்ணீர் அதிகமாக செல்லும் சாலைகளை கான்கிரிட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அது போன்று ஃபேவர் பிளாக்கும் நிறைய இடங்களில் போட்டுக் கொண்டிருக்கிறோம். மழை வெள்ளத்தால் ஏற்படுகின்ற பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறோம். சாலைகளில் கனரக வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் கனிமவள லாரிகளை கட்டுப்படுத்துவதற்கும் நாங்கள் எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். கடந்த மாதம் மட்டும் கனிமவளம் கொண்டு சென்ற லாரிகளுக்கு 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். பல வழக்குகள் போட்டிருக்கிறோம். திருட்டு வழக்கும் போட்டுள்ளோம். இதை கண்காணிப்பதற்காக ஜோதி நிர்மலா என்ற மானிட்டரிங் ஆபீஸரை நியமித்துள்ளார் முதல்வர். கனிமவளம் எந்தெந்த விதத்தில் கட்டுப்படுத்த முடியும் என்பதை மிகத் தீவிரமாக அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

6,000 கோடி ரூபாயை பா.ஜ.க தேர்தல் பத்திரத்தின் மூலமாக தேர்தல் நிதியாக திரட்டி இருக்கிறது. அது யாரிடத்தில் இருந்து வந்தது என்ற செய்திகளை வெளியிடக் கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதான் ஒளிவு மறைவற்ற அரசா… ரிசர்வ் வங்கியும், தேர்தல் கமிஷனும், நாட்டின்மீது அக்கறை கொண்டவர்களும் இது தவறாக சென்றுவிடும் என்று எச்சரித்த பிறகும், அதை கண்டு கொள்ளாமல் உரிய முறைகளை பின்பற்றாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு கொண்டு வந்தார்கள். எனவேதான் இது அரசமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்புக்கு பிறகு ஒரு நிமிடகூட இந்தப் பதவியில் இருப்பதற்கு பிரதமர் மோடி அவர்கள் தகுதி இல்லாதவர். அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும், ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பது எனக்கு புரியவில்லை. பா.ஜ.க ஆட்சியில் எத்தனை தலைவர்களை அணி மாற்றியிருக்கிறார்கள். கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என ஒவ்வொரு மாநிலத்திலும் குதிரை பேரம் நடத்துவதில் ஒரு சிறந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. இது மக்களிடம் செல்லாது. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *