Farmers Protest: `சோனிக் ஒலிபெருக்கி டு தற்காலிக சிறைகள்’- விசாயிகளை தடுக்க போலீஸின் முன்னேற்பாடுகள் | Delhi police use concrete blocks, sonic weapons, tear gas, temporary prisons for stop farmers protest

Whatsapp Image 2024 02 13 At 3 03 10 Pm.jpeg

இதில், கடந்த இரண்டு நாள்களாக எல்லைகளில் குவிந்த விவசாயிகள் மீது போலீஸார் டிரோன் மூலமாக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுமட்டுமல்லாமல், டிராக்டர்கள் கடக்க முடியாத வகையில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு தடுப்புகள், சாலைகளில் இரும்பு ஆணிகள் பதித்தல், மணல், செங்கல் நிரப்பிய தடுப்புகள், பல அடுக்கு முள் கம்பி சுற்றிய தடுப்புகள், குதிரைகளில் சாலையைக் கடப்போர் விழும் வகையில் தரையில் லூப்ரிகன்ட்ஸ் (Lubricants) ஊற்றிவைத்து துப்பாக்கிகளுடன் போலீஸார் தயாராக இருக்கின்றனர்.

விவசாயிகளைத் தடுக்கும் பணியில் போலீஸ்

விவசாயிகளைத் தடுக்கும் பணியில் போலீஸ்

முக்கியமாக, அதீத ஒலி எழுப்பக்கூடிய சோனிக் ஒலிபெருக்கிகளையும் போலீஸார் பொருத்திவைத்திருக்கின்றனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் செவித்திறனைப் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. சில இடங்களில் தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் டிரோன்களை காற்றாடி கொண்டும், கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்கள் கொண்டும் விவசாயிகள் தகர்த்துவருகின்றனர். இத்தகைய செயல்பாடுகளால், `விவசாயிகளை இவ்வளவு கடுமையாகத் தீவிரவாதிகள் போல பா.ஜ.க அரசு எதிர்க்கிறது’ என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றன.

இத்தகைய சூழலில், பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, சன்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட விவசாய அமைப்புகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் போராட்டத்தை நிறுத்திவைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. சண்டிகரில் இன்று நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *