விவசாயிகளை பயங்கரவாதிகள்போல அணுகுகிறதா மத்திய அரசு?! – கேள்வியும் பின்னணியும்! | bjp government block farmers and farmers were attacked with teargas shells

Whatsapp Image 2024 02 13 At 14 46 25.jpeg

சாலைகளை மறித்து காங்கிரீட் தடுப்பகளையும், இரும்புத்தடுப்புகளையும் வைத்திருப்பதுடன், முள்வேலிகளையும் அமைத்திருக்கிறார்கள். இவற்றை மீறி, வயல்வெளிகள் வழியாகவும், ஆற்று வழியாகவும் விசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுகிறார்கள். மேலும் தடுப்புகளை அகற்றும் உபகரணங்களை அவர்கள் ட்ராக்டரில் வைத்திருக்கிறார்கள். அதையும் தடுப்பதற்காக, விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகிறார்கள். அதையும் மீறி டெல்லிக்கு எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டன.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப், ஹரியானா எல்லையில் தடைகளைத் தாண்டி விவசாயிகள் முன்னேறியபோது, போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ‘நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகளை, பயங்கரவாதிகள்போல நடத்துவதா?’ என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

“தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?” என முதல்வர் ஸ்டாலினும் கண்டித்திருக்கிறார்.

‘விவசாயிகள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய செயல் வெட்கக்கேடானது. அதுவும் டிரோன் மூலம் வீசுகிறார்கள். இந்திய வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்’ என்று விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. காவல்துறையின் டிரோன் முயற்சியை தடுக்கும் விதமாக விவசாயிகள் பட்டம் விடும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *