நாம் தமிழர்: `கரும்பு விவசாயி’ சின்னத்துக்கு சிக்கல்? – சர்ச்சையும் விளக்கமும்!

65aa996f808ba.jpg

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தேர்தலுக்கான பணிகளை விறுவிறுப்பாக மேற்கொள்கின்றனர் அரசியல் கட்சிகள். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கான சின்னங்ளை விண்ணப்பிக்கும் பணிகளும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் `கரும்பு விவசாயி’ சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் கசிகின்றன. அதுகுறித்து விசாரித்தோம்.

நாம் தமிழர் கட்சி சின்னம்

என்.ஐ.ஏ நாம் தமிழர் நிர்வாகிகளை விசாரித்த அதிர்வே அடங்காத நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி நெருப்பை பற்ற வைத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்.ஐ.ஏ, சின்னம் முடங்கும் அபாயம் என அடுத்தடுத்த ’செக்’ கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளன. சின்னம் விவகாரம் பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகமும் நா.த.க-வினர் மத்தியில் கிளம்பியிருக்கிறது.

கரும்பு விவசாயி சின்னம்

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காது என்ற முன்முடிவுக்கு இப்போதே வர முடியாது. மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தாலும் சின்னம் ஒதுக்கும்போது யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் இவ்விவகாரத்தில் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு முன் பல வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் ஆணையத்திலேயே அவர்கள் முறையீடலாம்… மேலும் நீதிமன்றம் வரையும் செல்லலாம். அப்படி எதுவுமே உதவவில்லை என்றால் யாருக்கும் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கிறதோ அவர்கள் விட்டுக் கொடுத்தால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு சின்னம் கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது” என்றனர்

நம்மிடம் பேசிய நா.த.க இடும்பாவனம் கார்த்திக் “தற்போதைய நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்குதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் சின்னத்தை கேட்டு பதிவு செய்ய வேண்டும்.

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக்

தேர்தல் ஆணையம் அதனை பரிசீலிக்கும். சின்னம் வழங்கும் விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகள் வருமான வரி கட்டியிருக்க வேண்டும் மேலும் இரண்டு தேர்தல்களை சந்திருக்க வேண்டும். அதன்படி நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தி வருகிறது. மூன்று பொதுத்தேர்தல்களையும் சந்தித்திருக்கிறது, எனவே நாம் தமிழர் கட்சிக்குதான் முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தேர்தலையே சந்திக்காத கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியிருப்பது அநீதி. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடுவோம், கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தையும் அணுக முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *