செந்தில் பாலாஜி: ஒரு மனு தள்ளுபடி; நாளை நேரில் ஆஜர்; ஜாமீன்?! – ஒரே நாளில் 3 முக்கிய நிகழ்வுகள்! | Three happenings in senthil balaji case, ED opposes bail

1708000583 Whatsapp Image 2023 08 28 At 3 09 45 Pm.jpeg

மேலும் “30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க அமலாக்கத்துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

செந்தில் பாலாஜி - நீதிபதி அல்லி

செந்தில் பாலாஜி – நீதிபதி அல்லி

தள்ளுபடி… நாளை நேரில் ஆஜர்!

இதனிடையே, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அவரை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி, பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.அல்லி கூறினார். அதேநேரம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இருபதாவது முறையாக நாளை ஒரு நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *