கழுகார்: ‘சீட்டு கேட்டது குத்தமாய்யா?’ டு `ஸ்வீட் பாக்ஸ் டார்கெட்; பதற்றமான அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!’ | Kazhugar updates on senthil balaji case and edaodi order

Eps.jpg

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலை நியாயமாக நடத்தும் வகையில் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் வேலையைத் தேர்தல் ஆணையமே செய்யும். ஆனால், இப்போதே அந்த வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது தமிழக பா.ஜ.க. தமிழகத்தில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என இப்போதே ஒரு மனுவைத் தயாரித்துவைத்திருக்கிறதாம் பா.ஜ.க. அதில் டி.ஜி.பி அலுவலகத்தில் பவர்ஃபுல் பதவிகளிலிருக்கும் மூன்று அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றனவாம்.

அதோடு சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களில் பணியாற்றும் போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களையும் சேர்த்திருக்கிறார்களாம். இந்தத் தகவல் கசிந்தவுடனேயே அந்த 10 பேரில் சிலரைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியில் மாநில அரசும் இறங்கியிருப்பதாகத் தகவல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *