`ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு..!’ – தமிழக அரசின் வாதமும் விளக்கமும்! | Resolutions against one nation one election were passed in Tamil nadu assembly

Ggxkfq5amaa20ft 1 .jfif .png

இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் நாடு குடியரசு நாடாக மாறியதிலிருந்து 1967 வரை சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடந்தன. அதன் பிறகு, பல்வேறு ஆட்சிக்கலைப்புகளால் பல நேரங்களில் தேர்தல் நடைபெற்றன. அதனால் நேர விரயம், நிதி விரயம் ஏற்படுகின்றன. கணக்கில் வராத பணம் தேர்தல் நேரத்தில் செலவிடப்படுகிறது. வாக்குக்காக பணம் கொடுக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம், அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள். எனவே, ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்.

ஒரே நாடு..ஒரே தேர்தல்!

ஒரே நாடு..ஒரே தேர்தல்!

தொகுதி மறுவரையை பொறுத்தவரையில் 2026-ல் நாடாளுமன்ற குழுவைக் கூட்டி, நாடாளுமன்றத்தில் அதற்கென்று ஒரு குழுவை அமைத்து அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி-க்களும்தான் இதை எப்படி செயல்படுத்தலாம் என்ற முடிவை எடுப்பார்கள். அதற்குள்ளாகவே, இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவதே தவறானது. 1000 தொகுதிகள் அல்ல. சுமார் 800 தொகுதிகளாக மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படும். மக்கள்தொகை அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு இருககிறது. அதே நேரத்தில், மறுசீரமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை நாம் சொல்ல வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *