ஆர்வம் காட்டும் திமுக; ரிப்பீட் கேட்கும் மதிமுக; சமூக பலம் கொ.ம.தே.க – கூட்டணியில் ஈரோடு யாருக்கு?! | who capture Erode constituency? conflict started between dmk alliance

Whatsapp Image 2024 02 12 At 21 58 17.jpeg

அடுத்த தேர்தலில் நமது சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என அவர் அளித்தார். அந்த வகையில் சீட்டை பெற்றுவிட வேண்டுமென சந்திரகுமார் முயற்சித்து வருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்த சீனியர்கள்.

கடந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொ.ம.தே.க. இந்த முறை ஈரோட்டை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காகவே தனது சமூக பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஈரோட்டை ஒட்டிய பெருந்துறையில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தையும், கின்னஸ் ரெக்காடாக வள்ளிக்கும்மி நடனத்தையும் அரங்கேற்றி உள்ளது. அக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி. பாலு, மாநில இளைஞரணிச் செயலாளர் சூர்யமூர்த்தி இருவரிடையேதான் போட்டி நிலவுகிறதாம்.

தனது சம்பந்தியான கே.கே.சி. பாலுவுக்கு சீட் வழங்கலாம் என பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தரப்பு நினைக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே கட்சிப் பதவி கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளனராம் கட்சி நிர்வாகிகள். இளைஞரணிச் செயலாளர் சூர்யமூர்த்திக்குதான் எம்.பி.சீட் வழங்க வேண்டுமென கோரிக்கையும் வலுக்கவே என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தெரிவிக்கின்றனர்.

ம.தி.மு.க-வுக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டு, அதில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை.வைகோ, களமிறங்காத பட்சத்தில், மீண்டும் ஈரோடு தொகுதி தனக்கு கேட்கலம் என்ற முடிவில் உள்ளார் தற்போதைய சிட்டிங் எம்.பி.கணோசமூர்த்தி. ஒருவேளை ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டால் கணேசமூர்த்தியின் அரசியல் அனுபவம், தி.மு.க. கூட்டணிக்கு இருக்கும் வாக்கு பலத்தை வைத்து ஜெயித்து விடலாம் என கணக்குப்போட்டு வருவதாக ம.தி.மு.க.வுக்குள் பேச்சு அடிபட்டு வருகிறது.

எனினும் வயது மூப்பு, கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்குள் பெரிய அளவில் திட்டங்களை நிறைவேற்றாதது போன்றவற்றால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொகுதியில் கணோசமூர்த்திக்கு பெயர் இல்லை என்று யோசித்து வருகிறதாம் ம.தி.மு.க. தலைமை.

வரும் நாள்களில் ஈரோடு தொகுதியை யார் பெறுவது என்று அனல் பறக்கும் போட்டி இருப்பது உறுதி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *