Tamil News Live Today: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின்… இன்று விசாரணை! – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?! | Tamil News Live Today live updates dated 14-02-2024

Whatsapp Image 2023 08 28 At 3 09 45 Pm.jpeg

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையின் விசாரணைக்கு பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றங்களை பல்வேறு தருணங்களில் நாடினார். எனினும் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்து வருகிறது. முக்கியமாக அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்படும் வாதங்களில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவர் அமைச்சராக நீடித்து வருகிறார். மேலும் அவரின் சகோதரருக்கு தொடர்ச்சியாக சம்மன் அனுப்பியும் அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். இந்த காரணங்களை அமலாக்கத்துறை தொடர்ந்து வாதங்களாக முன்வைத்து ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அமைச்சராக இருப்பவர் வெளியே வந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது என அமலாக்கத்துறை தொடர்ந்து வாதங்கள் வைத்து வந்த நிலையில், தற்போது அமைச்சர் பதவி செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதால் அதனை முன்வைத்து செந்தில் பாலாஜி தரப்பினர் இன்று வாதங்களை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய தினம் ஜாமீன் மனு மீதான விசாரணை முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *