Junior Vikatan – 18 February 2024 – “ஒன்றிய அரசு நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது” என்ற முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம்? – ஒன் பை டூ | discussion about stlain comments about central government

65cbe412b5724.jpg

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“முதல்வர் பொய் சொல்கிறார். மத்திய நிதியமைச்சர், `நாடு முழுவதுமுள்ள எந்த மாநிலத்துக்கும் பாரபட்சமில்லாமல் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தைத் திசைதிருப்பி அரசியலாக்கி, மக்களைக் குழப்பிவிடும் செயலை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன. நிதி ஆணையம் என்ன சொல்லியிருக்கிறதோ அதன்படியே நிதிப் பகிர்வு இருக்க முடியும். அதைத் தாண்டி யாருக்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ நிதியைக் கொடுக்க முடியாது. அதேபோல, உற்பத்தி மாநிலங்களுக்கும், விவசாய மாநிலங்களுக்கும் வழங்கப்படும் நிதிப் பகிர்வில் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். தமிழகம் போன்ற மாநிலத்தில் முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி போன்ற பல்வேறு காரணங்களால் அதிகமாக வரி வருகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயமே முதன்மையானது. இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. ஒட்டுமொத்த பாரதத்திலும் ஒரே மாதிரியான வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறது பா.ஜ.க. இவர்கள் சொல்வதுபோல தென்னிந்தியாவை பா.ஜ.க வஞ்சிப்பதாக இருந்தால் ஆந்திராவும் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டுமல்லவா… இனி ஆட்சிப் பொறுப்புக்கு வரப்போவதில்லை என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பை மீறிப் பேசிக்கொண்டிருக்கின்றன.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *