Delhi Chalo: டிரோன் மூலம் வீசப்படும் கண்ணீர் புகைக்குண்டுகள்… சமாளிக்க `பட்டம்’ விடும் விவசாயிகள்! | Farmers Fly Kites To Tackle Drones Carrying Tear Gas Shells

Untitled Design 2024 02 14t162900 491.png

இந்த நிலையில், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை எதிர்கொள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தண்ணீர் பாட்டில்கள், ஈரத் துணிகள், கண்ணீர்ப் புகையின் தாக்கத்தைக் குறைக்கப் பாதுகாப்பு உபகரணங்களுடன் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர். மேலும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளைச் சுமந்து பறக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்ய, நூலில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது குறித்துப் பேசும் விவசாயிகள், “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஏதோ தீவிரவாதிகளை எதிர்கொள்வதைப்போல் அரசு இயந்திரம் நடத்துகிறது. டிரோன் மூலம் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, எங்களைக் கலைக்கப் பார்க்கின்றனர். அதை எதிர்கொள்ளவே இப்படி பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறோம்” என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *