வந்தாரை வெற்றி பெற வைக்கும் வரலாறு… திருச்சியை குறி வைக்கும் துரை வைகோ – சிக்கலில் திருநாவுக்கரசர்| trichy lok shaba, Durai vaiko has an eye

1707878107 Durai Vaiko.jpg

இந்த போட்டியில் தற்போது ம.தி.மு.க தான் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2004 – ஆம் ஆண்டு இந்த தொகுதியில் ம.தி.மு.க-வின் எல்.கணேசன் வெற்றி பெற்றிருப்பதால் அதை ஒரு காரணமாக காட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க-வினர் தி.மு.க தலைமையை வைகோ மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழலில் தான் திருச்சியில் கடந்த 12-ம் தேதி மத்திய மண்டல ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ம.தி.மு.க-வின் முதன்மை பொதுச் செயலாளரான துரை வைகோ கலந்து கொண்டு தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார்.

துரை வைகோ

துரை வைகோ
தே.தீட்ஷித்

இதேபோல் ஏற்கனவே கடந்த மாதம் தான் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்று விட்டு சென்றார். அதேபோல், கடந்த வருடம் அக்டோபர் மாதம் காவிரி விவகாரத்தில் தீர்வு காணாமல் இருப்பதாகவும், நூறு நாள்கள் வேலைத்திட்டத்தை முடக்க நினைப்பதாகவும், மத்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிலும் துரை வைகோ தான் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது, அடுத்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காலூன்றுவதற்கு முன்னேற்பாடுகளை செய்வதற்காகதான்.

வழக்கமாக ம.தி.மு.க-வில் தேர்தல் நிதி பெறுவது என்றால் வைகோ தான் செல்வார். ஆனால், இப்பொழுது முதல்முறையாக துரை வைகோ வந்திருப்பதை வைத்து பார்க்கும் போது, அவர் திருச்சியில்தான் போட்டியிடப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல், நிதி வழங்கும் விழாவுக்கு பிறகு பேசிய துரை வைகோ, ‘திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமையும், தி.மு.க தலைமையும்தான் முடிவெடுக்கும்’ என்று மறுக்காமல் ‘தலைமை முடிவெடுக்கும்’ என்று உள்ளுக்குள் திருச்சி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதை சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *