மசியாத அதிமுக; உஷாரான டெல்லி… நீலகிரியில் இருந்து ம.பி-க்கு எல்.முருகன் ரூட் மாறிய பின்னணி

Img 20240214 Wa0018.jpg

நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கிறது . இந்நிலையில் பா.ஜ.க சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருக்கிறது. அதில், மத்திய இணை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து பேட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் எல்‌.முருகன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எல். முருகன்

இந்த திடீர் மாற்றத்துக்கான பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த பா‌.ஜ.க – வின் முக்கிய நிர்வாகி ஒருவர், “நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எல்‌.முருகனின் நீண்ட கனவு. கிட்டத்தட்ட கடந்த 10 மாதங்களாக நீலகிரி தொகுதிக்கு வருகைத் தந்து, மக்களைச் சந்தித்து வருகிறார். மத்திய இணை அமைச்சராக இருந்தாலும் மாதம் தவறாமல் நீலகிரிக்கு வந்துக் கொண்டிருக்கிறார். ஊட்டியில் முகாம் அலுவலகம் ஒன்றையும் அமைத்திருக்கிறார். நீலகிரி தொகுதியின் வேட்பாளர் இவர் தான் என தேர்தல் பிரசாரமே நடைபெற்று வந்தது. கட்சி நிர்வாகிகள் பலரும் முருகனுக்கு ஆதரவாக களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிட்டிங் எம்.பி ஆ. ராசாவை வென்றாக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருந்தார்.

நீலகிரி தொகுதியில் அவருக்கான வாக்கு வங்கி குறித்தும் அறிந்திருந்தார். ஆனால், அ.தி.மு.க கூட்டணி இல்லாமல் வெற்றியடைவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது” என்றார்.

அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசிய போது, “நீலகிரியில் போட்டியிட முருகன் ஆர்வம் காட்டியது உண்மை தான். சின்சியராக வேலையும் செய்தார். மலை பகுதிகளில் பாஜகவுக்கு சாதகமான சூழல் இருந்தாலும், தொகுதியின் மற்ற பெரும்பாலான பகுதிகளில் அதிமுக-வின் வாக்குகள் இன்றி ஆ.ராசாவை வெல்வது சிரமம். பாஜக தேசிய தலைவர் தமிழகம் வந்து சென்ற போது கூட அதிமுக கூட்டணிக்கு இசைந்து கொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன், நீலகிரி தொகுதியில் இறங்கி, மும்முனை போட்டியால் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், மத்திய அமைச்சர் ஒருவர் தோல்வி அடைந்தார் என்ற செய்தி தேசிய அளவில் கவனம் பெறும். இவற்றை தவிர்க்கவே அவரை மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாக சொல்லியது டெல்லி” என்கிறார்கள்.

எல். முருகன்

இந்த சர்ச்சைத் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்‌. முருகன், “கூட்டணி இல்லாத காரணத்தால் நான் பின்வாங்கியதாக சொல்லப்படும் கருத்தில் உண்மையில்லை. கூட்டணியை உறுதி செய்ய இன்னும் நாட்கள் இருக்கிறது. கட்சியின் கட்டளையை நிறைவேற்ற எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் போட்டியிட கட்சி அறிவித்தால் அங்கும் போட்டியிடுவேன். ஆ. ராசாவை மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்ததை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டியது எங்களின் கடமை. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றிப் பெறுவது உறுதி ” என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *