`தங்கம் பாலிட்டிக்ஸ்; தயாராகும் மூர்த்தி..!’ – தேனி தொகுதி திமுக நிலவரம் என்ன? | Theni MP Constituency dmk seat politics

Theni.jpg

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கட்சியினரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் திமுக அல்லது அதன் கூட்டணி கட்சி என யார் இறங்கினாலும், தேனி எம்.பி தொகுதியை கைப்பற்றுவது அத்தனை எளிதானதாக இருக்காது என்கிறார்கள் உள்ளூர் உடன் பிறப்புகள் சிலர். காரணம் உட்கட்சி பூசல்!

தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதாலும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றதாலும், டி.டி.வி.தினகரன் முதல் முறை போட்டியிட்டு எம்.பி., ஆக தேர்வாகிய தொகுதி என்பதாலும் தேனி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்த்து பெற்றுள்ளது.

பெரியகுளம் தொகுதியாக இருந்தபோதும், தேனி தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகும் அதிகமுறை அதிமுக தான் வென்றிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *