Farmers Protest: `6 மாதத்துக்கான உணவு பொருள்கள்’ – டிராக்டரில் டெல்லியை நெருங்கிய பஞ்சாப் விவசாயிகள் | Farmers of Punjab set off for Delhi on tractors with 6 months worth of food

Ap24044242863985.jpg

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நேற்று இரவு பஞ்சாப்பில் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று காலையில் பஞ்சாப்பில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். டிராக்டரில் 6 மாதத்திற்கு தேவையான உணவு தானியம் மற்றும் டீசல் கையிருப்பு வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டிராக்டரில் பேரணியாக வரும் வரும் விவசாயி ஹர்பஜன் சிங் இது குறித்து பேசுகையில், “‘நான் 2020ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்று இருக்கிறேன். எங்களது டிராக்டரில் சிமெண்ட் தடுப்புகளை உடைக்கும் உபகரணங்கள் உட்பட அனைத்தும் இருக்கிறது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களது பொறுமையை சோதித்தால் சும்மா இருக்க மாட்டோம்.

இதற்கு முன்பு நடந்த 13 மாத போராட்டத்தின் போது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் இது வரை நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.

டெல்லி போலீஸாரும் போராட்டத்தை தடுக்கவும், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கவும் எல்லையோரத்தில் உள்ள காஜிபூர், திக்ரி, சிங்கு சாலைகளில் தடுப்பு அமைத்து இருக்கின்றனர். ட்ரோன்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரு மாதத்திற்கு பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகில் உள்ள குருகிராம் மற்றும் நொய்டாவிலும் கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெல்லி – மீரட் சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. ஒருகிலோமீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் வரை ஆகிறது என்று வாகன ஓட்டிகள் குறைபட்டுக்கொண்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த 200 விவசாய அமைப்புகள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 1500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *