`மாநிலங்களவை செல்லும் சோனியா காந்தி(?) `ரேபரேலி’யில் பிரியங்கா?!’ – இது காங்கிரஸ் போடும் கணக்கு

D14a1klk Sonia Gandhi Priyanka Gandhi Pti 650x400 08 March 19.jpg

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தனர். அந்த அளவுக்கு பாரம்பர்ய காங்கிரஸ் தொகுதிகள் அவை. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அமேதி தொகுதியில் போட்டியிட்ட, காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராகுல் காந்தியே தோல்வி அடைந்துவிட்டார். இரண்டு தொகுதியில் போட்டியிட்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் மட்டுமே ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி

சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது சோனியா காந்திக்கு உடல் நிலை பிரச்னைகள் இருக்கிறது. எனவே அவரால் மக்களவை தேர்தலில் சரியாக பிரசாரம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தொகுதி பக்கம் செல்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகிறார். இதையடுத்து சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ரேபரேலி தொகுதியை தனது மகள் பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருந்தாலும் பிரியங்கா காந்தி அந்த தேர்தலில் முழுமையாக கட்சி பணி செய்தார். மேலும் பல்வேறு தருணங்களில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். எனவே அவரை அங்கு மேற்கொண்டு கவனம் செலுத்தும் வகையில் ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது என்கிறார்கள்.

ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி – காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்திக்கு எதிராக சோஷியல் மீடியா மூலம் பா.ஜ.க-வும், பிரதமர் மோடியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் காங்கிரஸ் செல்வாக்குக்கும் பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை சரி செய்ய எதிர்காலத்தில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் திட்டத்தை வைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. எனவேதான் இப்போது பிரியங்கா காந்தியை மக்களவை தேர்தலில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *