‘‘தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் பதில்’’ – முதல்வர் ஸ்டாலின்! | young tribal girl sripathi passes judge exam – appreciated by chief minister stalin

Whatsapp Image 2024 02 13 At 3 19 19 Pm.jpeg

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையிலுள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ‘உரிமையியல் நீதிபதி’ தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகியிருக்கிறார். 23 வயதே ஆகும் ஸ்ரீபதி, வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். இன்று பழங்குடி இனத்துக்கே பெருமைச் சேர்த்திருக்கிறார். ஸ்ரீபதிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஸ்ரீபதியை மனதார பாராட்டியிருக்கிறார். இது குறித்து கருத்து பதிந்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அதுவும் நமது ‘திராவிட மாடல் அரசு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை’ எனக் கொண்டுவந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியிருக்கிறார் என்பதை அறிந்து பெருமைக் கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரின் தாய்க்கும், கணவருக்கும் எனது பாராட்டுகள். ‘சமூகநீதி’ என்றச் சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல், தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்’’ என்று குறிப்பிட்டிருப்பதோடு, ‘நெடுந்தமிழ் நாடெனும் செல்வி – நல்ல நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!’ என்ற- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உணர்த்திய வரிகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *