ஒதுங்கும் நிர்வாகிகள்; இளைஞர்கள் டார்கெட்… வேலுமணி வியூகம் – எப்படி இருக்கிறது கொங்கு அதிமுக?!

Img 20210312 Wa0118.jpg

எம்ஜிஆர் காலம் தொடங்கி எடப்பாடி பழனிசாமி காலம் வரை அதிமுக-வுக்கு கொங்கு மண்டலம்  பெருமளவு வெற்றியை கொடுத்துள்ளது. அதே நம்பிக்கையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி, வியூகங்கள் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

கோவை

பூத் கமிட்டி, தெருமுனை பிரசாரம், மாற்றுக் கட்சி இளைஞர்களை அதிமுக-வுக்கு இழுப்பது என தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வேலுமணிதான் கூட்டணி விவகாரங்களை கையாண்டார்.  அவர்  வசம் இருந்த கோவை மாவட்டத்தை முழுவதிலும் அதிமுகவை வெற்றி பெற வைத்தார். இம்முறை அவர் வசம் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. சராசரியாக ஒரு பூத் கமிட்டிக்கு 19 பேர் நியமித்துள்ளனர்.

வேலுமணி தெருமுனை பிரசாரம்

இந்தமுறை வாக்காளர்களிடம் பெரும்பாலும் பெண் நிர்வாகிகளை தான் பேச வைக்க உள்ளோம். இது பெண்கள் மத்தியில் வாக்காக மாறும் என நம்பிக்கை உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் நடத்திய தெருமுனை பிரசாரம் பாசிட்டிவான ரிசல்டை கொடுத்தது. அதனால் இப்போதும் தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறோம். மாற்றுக்கட்சிகளில் இருந்து அதிகளவு இளைஞர்கள் அதிமுகவில் இணைகிறார்கள்.

முக்கியமாக கடந்த சட்டசபை தேர்தலில் திமுக எம்.பி ஆ. ராசா, எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து பேசிய கருத்து கொங்கு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுவே திமுக-வுக்கு பின்னடைவை கொடுத்தது. இந்த முறை ராசா எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரின் சொந்த நீலகிரி தொகுதியிலேயே பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தொடர்ந்து அவரின் தரம் தாழ்ந்த செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து செல்வோம்.

ஆ. ராசா

தற்போது திமுகவின் கொங்கு மண்டல முகமாக அறியப்படும் ராசாவின் செயல் அவர்களுக்கு இந்த முறையும் பின்னடைவை ஏற்படுத்தும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதில், 10 சதவிகித திட்டங்கள் கூட திமுக ஆட்சியில் நிறைவேற்றவில்லை. எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தத் திட்டங்களும் முழுமையடையவில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவில் எங்களுக்கு பாசிட்டிவான ரிசல்ட்  கிடைக்கும்.” என்றனர்.

அதேநேரத்தில் அதிமுகவில் வழக்கமான உற்சாகம் மிஸ் ஆவதாகவும் குமுறல்கள் அதிகம் ஒலிக்கின்றன. இதுகுறித்து பேசிய அதிமுகவினர், “பாஜகவுடன் கூட்டணி பிரிந்தது வாக்குகளை பிரித்து திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகலாம். தவிர வேட்பாளர்கள் பெரும் பணம் செலவு செய்ய வேண்டும்என சொல்கிறார்கள். இதனாலேயே பெரும்பாலான சீனியர் நிர்வாகிகளே சீட்  வேண்டாம் என விலகுகிறார்கள். இங்கு வேலுமணி தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

அதிமுக

அவரைத் தவிர யாரையும் வளரவிடுவதில்லை. கடந்த காலங்களில் கட்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய வைத்து, அவர்களுக்கு பெரிய பதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். இந்த முறையும் அவர் கைக்காட்டுபவருக்கு தான் சீட்  கிடைக்கப்போகிறது. இதற்கு ஏன் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று ஒதுங்கி இருக்கிறார்கள்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *