`இந்தியாவின் தோழி..!’ – சர்வதேச நீதிமன்ற நீதிபதியைப் புகழ்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் |Supreme court chief justice DY Chandrachud praise ICJ judge Hilary Chalesworth as friend of India

Gf Hqwrboaaxyay.jpeg

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொர்த்தை (Hilary Charlesworth), “இந்தியாவின் தோழி” என இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரான ஹிலாரி சார்லஸ்வொர்த், மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியருமாவார். மெல்போர்ன் மற்றும் ஹார்வர்ட் சட்டப் பள்ளிகளில் பட்டம் பெற்றவரான ஹிலாரி சார்லஸ்வொர்த், American Journal of International Law, Asian Journal of International Law உள்ளிட்ட பல சட்ட வெளியீடுகளின் ஆசிரியர் குழு உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார்.

சந்திரசூட் - சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொர்த்

சந்திரசூட் – சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொர்த்

விக்டோரியா உச்ச நீதிமன்றத்தின் சொலிசிட்டராக பணியாற்றி வந்த ஹிலாரி சார்லஸ்வொர்த்தை, கடந்த 2021-ம் ஆண்டு, மே 31-ம் தேதி ஆஸ்திரேலிய நீதிபதி ஜேம்ஸ் ரிச்சர்ட் க்ராஃபோர்ட் இறந்தபிறகு, சர்வதேச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு நியமிக்க ஆஸ்திரேலிய அரசு ஆதரவு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, 2021, நவம்பர் 5-ம் தேதி முதல் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக ஹிலாரி சார்லஸ்வொர்த் தற்போது பணியாற்றி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *