பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; – முன்னாள் டிஜிபி-யின் தண்டனையை உறுதிசெய்த கோர்ட்! | Villupuram district court upheld the conviction of former DGP in sexual harassment case

அப்போது,  முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்தும், முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் மட்டும் விதித்தும் தீர்ப்பளித்தார். அதன் தொடர்ச்சியாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான வைத்தியநாதன், ரவிச்சந்திரன், கலா மற்றும் குற்ற வழக்கு தொடர்புதுறையின் கடலூர் மண்டல துணை இயக்குநர் அமிஜத் அலி உள்ளிட்டவர்கள், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சம்பந்தமாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

முதல் எதிரியான முன்னாள் சிறப்பு டி ஜி.பி-க்கு பிரிவு 354 (a2) ன் கீழ் 3 வருடங்கள் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், தமிழ்நாடு பெண்கள் தொல்லை தடுப்புச் சட்டம் பிரிவு 4-ன் கீழ், 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு பிரிவில் வழங்கப்பட்டுள்ள தலா மூன்று ஆண்டுக்கால சிறைத் தண்டனையை, ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், 341-வது பிரிவின் கீழ் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *