`பழனி கோயிலில் கொடிமரம் இல்லை..!’ – சுகி சிவம் பேச்சுக்கு, வழக்கு தொடர்ந்தவர் எதிர்ப்பு! Objection to the of the spiritual speaker

Img 20230123 Wa0048.jpg

பழனி மலைக்கோயில் ராஜகோபுரம், மூலவருக்கு மேல் உள்ள விமானம், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என ஆகமவிதிபடி உள்ளது. ஆகமவிதிப்படி கட்டப்படும் கோயிலில்தான் விமானம் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோக உற்சவரான சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். பாரவேல் என்ற மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட முருகருக்கான வாகனமாக மயில்சிலை, பலிபீடம், கொடிமரம் இருக்கிறது. காப்புக்கட்டும் நிகழ்ச்சியே இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது. ஆகமவிதிகளுக்குட்பட்ட கோயில்களில்தான் துவார பாலகர்கள் இருப்பார்கள். அதுவும் இருக்கிறது.

சேவற்கொடியுடன் கூடிய கொடிமரம்

சேவற்கொடியுடன் கூடிய கொடிமரம்

இதுவரை நடந்த கோயில் கும்பாபிஷேகங்களும் ஆகமவிதிப்படிதானே நடந்தது. கடந்த ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் 98 யாகசாலைகள் அமைத்து 120 சிவாச்சாரியார்களால் வேத மத்திரங்கள் ஓதி ஆகமவிதிப்படி யாகம் நடத்தினார்கள். ஆகமவிதிப்படி கட்டாத கோயிலுக்கா 3 கோடி ரூபாய்க்கு செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்காக அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவில் சுகிசிவம் இருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *