ஜோதிடம்

1197953.jpg

பொதுப்பலன்: கடன் தீர்க்க, மருந்துண்ண, வாஸ்துப்படி வீட்டை சீரமைக்க, வழக்குகள் பேசி முடிக்க, தற்காப்பு கலைகள் பயில நல்ல நாள். எதிரிகள் மீது வழக்கு தொடுத்தவர்கள் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து, பொறுப்புடன் செயல்படுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என கண்டறிவீர்கள்.

ரிஷபம்: எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து, பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பணப் பற்றாக்குறை இருந்தாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கடகம்: கடந்தகால நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். நட்பு வழியில் நல்ல சேதி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: சிபாரிசு செய்வது, ஜாமீன் கையெழுத்திடுவது ஆகியவை வேண்டாம். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பிரச்சினை சுமுகமாக தீரும். வாகன வகையில் செலவு ஏற்படும்.

கன்னி: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

துலாம்: நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள், அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

தனுசு: பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

மகரம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் களைகட்டும்.

கும்பம்: எக்காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுங்கள். வெளியூர் பயணத்தால் அலைச்சல், செலவு இருந்தாலும், ஆதாயமும் உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகும்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *