சிவகங்கை: குவிக்கப்பட்ட 1500 போலீஸ்; மக்கள் வடம் பிடிக்காமல் நடந்த கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம்! | Kandadevi temple chariot sample run staged in sivagangai

Img 20240212 005034.jpg

இந்த நிலையில்தான், புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டுமென்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் எனவர் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கில், தேரோட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட, மாவட்ட நிர்வாகம் மீண்டும் தாமதப்படுத்தியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “அப்பகுதி மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லை, தேரோட்டம் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம்’ என்று  அரசு தரப்பில் தெரிவிக்க, ’சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், சில பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்பது கவலை அளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? அனைத்து தரப்பு மக்கள் பங்களிப்புடன் தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டும். முடியாவிட்டால், துணை ராணுவத்தை வரவழைக்க உத்தரவிடலாமா?’ என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாக கேள்வி எழுப்பியது. 

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

உடனே சிவகங்கை மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதி மக்களையும், ஊர்த் தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ‘ஜனவரி 21-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெறும்’ என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ‘தேரோட்டம் சம்பந்தமாக 1998-ல் வழக்கு தொடர்ந்த என்னை ஆலோசானைக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை, மாவட்ட நிர்வாகமே புதிய தேரை  வெள்ளோட்டம் நடத்தலாம்’ என, பல விஷயங்களைக் குறிப்பிட்டு சிவகங்கை கலெக்டருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *