ஹங்கேரியா: பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு; முதல் பெண் குடியரசுத் தலைவர் ராஜினாமா! – காரணம் என்ன?

Ggbv0tzauaacksq.jfif .png

2022-ம் ஆண்டு ஹங்கேரியா நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் கத்தலின் நோவக் (46). இந்த நிலையில், அரசு நடத்தும் சிறார் இல்லத்தில், சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாகத் தண்டிக்கப்பட்டார்.

இதற்கிடையில், முன்னாள் துணை இயக்குநருக்குக் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்கி ஆணை பிறப்பித்தார். கத்தலின் நோவாக்-வின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கின

கத்தலின் நோவக்

இந்த நிலையில், உலக வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் – ஹங்கேரியா இடையே நடக்கும் போட்டியைக் காண கத்தார் சென்றிருந்த கத்தலின் நோவாக், உடனடியாக நாடு திரும்பினார். மேலும், அடுத்த சில மணி நேரங்களில் தனது ராஜினாமா குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். பாலியல் குற்றத்தை மறைத்தவருக்கு நான் மன்னிப்பு வழங்கியதன் மூலம் தவறு செய்துவிட்டேன். நான் காயப்படுத்தியவர்களிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

நான் எப்போதும் அவர்களை ஆதரிக்கவில்லை. நான் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக இருக்கிறேன்… இருந்தேன்… இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நீதி அமைச்சர் ஜூடிட் வர்காவும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *