ரூ.2.48 கோடி முறைகேடு; வழக்குத் தொடர்ந்தவர்மீது தாக்குதல் – ராணிப்பேட்டை ஆட்சியர் ஆஜராக உத்தரவு! | panchayat scam complaint – high court orders ranipet collector to appear

Whatsapp Image 2024 02 11 At 12 46 54 Pm.jpeg

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ‘இது தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக’ தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘முறைகேடு புகார் தொடர்பாக, இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றுகூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ராமச்சந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலையே நடக்காமல் பணம் கையாடல் செய்யப்பட்டதாக வாதிட்டு, அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். மேலும், மனுதாரர் தாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் வரும் 19-ம் தேதி ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறார். இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியத்திலுள்ள மோசூர் கிராம ஊராட்சியிலும், நாடக மேடை, பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுவிட்டதாக… செய்யாத அந்தப் பணிகளைச் செய்ததாகக் கூறி லட்சக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு புகார் எழுந்ததும், குறிப்பிடத்தக்கது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *