கருத்துக்கணிப்பில் திமுக-வுக்கு சாதக முடிவு; அதிமுக-வுக்கு சோதனை; டீலிங் இனி எப்படி இருக்கும்?| Election survey predict that dmk led alliance will sweep in the coming lok sabha election in tamil nadu

Staeda.jpg

இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கேட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ஓ.பன்னீர்செல்வத்தை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தமிழகத்தில் மக்கள் மனதில் எப்போது நிலைத்திருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும். பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. பா.ஜ.க இரண்டு சதவித வாக்குகளை மட்டுமே வைத்திருக்கிறது. ஓ.பி.எஸ் பா.ஜ.க-வின் அடிமையாக மாறிவிட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் 2.5 சதவிகித வாக்குகள் மட்டுமே வித்தியாசம். எனவே, மீண்டும் அ.தி.மு.க வெற்றிபெறும்’ என்று பேசியிருக்கிறார்.

2.5 சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம் என்று ஜெயக்குமார் சொன்னாலும், வெற்றி பெற்றது யார் என்பதுதானே முக்கியம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என அ.தி.மு.க வரிசையாக தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அ.தி.மு.க-வுக்கு மற்றொரு சோதனையாக, வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *