O Panneerselvam Will Join BJP Says Jayakumar | தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்… ஜெயக்குமார் தாக்கு

365949 Jayajmar.jpg

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார் என்றும், பா.ஜ.கவிற்கு கூலிக்கு மாரடடிப்பவராக ஒ.பி.எஸ் உள்ளார் என்றவர், அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும் என்றும், பாஜக இல்லாத கூட்டணியாக அமையும் என்றார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் எடப்பாடி ஆட்சி இருந்ததாகவும், பாஜக ஆதரவு நடந்து இருப்பதாக ஓபிஎஸ் சொல்வது மரை கழன்ட விடயம் என்று சாடியவர், தேமுதிக 14 தொகுதிகள் கேட்பது அவர்களுடைய விருப்பம் என்றும், மற்ற கட்சிதான் அதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் என்றவர், எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார் என்றும், இதில் நான் எதுவும் சொல்ல முடியாது என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா பல நேரங்களில் தனித்து போட்டியிட்டு ஜெயித்து இருப்பதாகவும்,  அவர்கள் வழியில் கழகம் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறும் என்றவர், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தான் வெற்றி பெற வேண்டும் என இல்லை என்றார்.

மேலும் படிக்க | அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் இவரா?

அதே நேரத்தில் கூட்டணிக்கு பல கட்சிகள் வரலாம் என்றும்,  தனித்தன்மையோடு பல கட்டங்களில் நாங்கள் வென்று இருக்கின்றோம் என்றும், கட்சிகள் இணைந்தால் அது அவர்களுக்கு அங்கீகாரமாக இருக்கும் என்றவர், பிற கட்சிகள் கூட்டணிக்கு வரட்டும் என காத்திருக்க வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை என்றும், பாஜக இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 

தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், தேர்தல் அறிவிக்க இன்னும் நேரம் இருப்பதால் அதற்குள் மகத்தான கூட்டணி அதிமுக தலைமையில் அமையும் என்றவர், நாங்கள் யாரையும் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது என்றும், யார் வீட்டு கதவையும் தட்டவேண்டியதும் கிடையாது என்றும், கட்சிகள் எங்களை நோக்கி வரும் என்றார். அதிமுகவின் இலக்கை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் உரிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாக சுட்டிக்காட்டி இந்த அரசு துக்ளக் அரசாங்கமாக இருபோதாகவும், உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை என்று நிர்வாக திறனற்ற அரசாக இந்த அரசு இருப்பதாக சாடினார்.

திமுக அதிமுக பார்த்து கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதாகவும், எங்களிடம் யாரும் மனு கொடுக்கக் கூடாது எனவும் மிரட்டி இருப்பதையும் மீறி பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகளுடன் வந்துள்ளதாக கூறியவர், அதிமுக நிச்சயம் செய்யும் என்ற நம்பிக்கையால் மிரட்டல்களை தாண்டி இங்கு வந்து மனு அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் பொழுது ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம் எனக்கூறி ஏன் போரை நிறுத்தவில்லை என்றும், கச்சத்தீவை தாரை வார்க்கும் பொழுது திமுக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கை அரசு அழுத்தங்களுக்கு பயந்தது என்றவர், இப்போது திமுக ஆட்சியில் பயமில்லாமல் இலங்கை அரசு செயல்படுவதால் தான் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறினார். 

தேர்தல் வருவதால் மட்டும் பசப்பு வார்த்தைகளை பேசி, நீலீக்கண்ணீரை திமுக வடிப்பதாகவும், மக்களை பாதிக்கின்ற எந்த சட்டத்தையும் அதிமுக ஏற்காது என்றும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக என்றார். பிரதமர் பாஜகவின் தலைவர்களில் ஒருவர், இது தேர்தல் காலம் என்பதால்இந்த நேரத்தில் அவரை எப்படி சந்திக்க முடியும் என்றவர், பல்லு படாமல் என பேசும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிச்சயம் லேகியம் விற்பவராகதான் இருப்பார் என்று சாடினார்.

மேலும் படிக்க | கோவை கார் வெடிகுண்டு விபத்து: தொடரும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *