திருச்சி: ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி, சாலைமறியல் போராட்டம்- கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது! | ROAD BLOCK PROTEST AGAINST GOVERNOR COMMUNIST CADRES ARRESTED

Protest.jpg

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காகவும், அதனை தொடர்ந்து மற்றொரு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையில், “மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என வலியுறுத்தியும், `கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகள் குறித்து தவறாக விமர்சனம் செய்யும் கவர்னரை கண்டிப்பதாகவும்’ கூறி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் இன்று திருவானைக்காவல் பகுதியில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தே.தீட்ஷித்

இந்த போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, மோகன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, பகுதி செயலாளர்கள் தர்மா, சுரேஷ், வேலுச்சாமி உள்ளிட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். அதோடு, இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட இன்னும் பலரையும் போலீஸார் கைதுசெய்தனர். இப்படி, கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் திருவானைக்காவல் பகுதியில் பரபரப்பு நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *