`எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை..!' – ஆ.ராசா பதிலடி

Img 20221016 Wa0011.jpg

எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி-யுமான ராசா தெரிவித்த கருத்துக்கு, அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதியில் அ.தி.மு.க-வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி

அதில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ராசா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, “எம்.ஜி.ஆர் குறித்து பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. எம்.ஜி.ஆர் குறித்து நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும் என்று சொன்னால், நான் அவரிடம் திருப்பி கேட்கிறேன்.

ராசா

உங்கள் கேபினட்டில் இருந்த ஓர் அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாகப் பேசி, அவர்மீது உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் இருக்கின்றன.

அதன் பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தி இருந்தீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க-வில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன்.” என்றார்.

ராசா

இதனிடையே, “எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததாக”  எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ராசா, “அது தனி கதை அதை தனியாகப் பேசுவோம்” என்று பதிலளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *