வெள்ளை அறிக்கை: `ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிகிறது!’ – சு.வெ | Communist MP Su Venkatesan slams BJP Govt and criticizes their finance white paper

Gf5bp2qwmaaaquu.jpeg

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஏற்கெனவே அறிவித்ததுபோல மத்திய அரசின் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இன்னொருபக்கம், இது `வெள்ளை அறிக்கை அல்ல, பொய் அறிக்கை” என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிந்துகொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

வெள்ளை அறிக்கைமீதான விவாதத்தின்போது உரையாற்றிய சு.வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்துக்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோலத்தான் சில கட்சிகளும். தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையைப் பற்றி நாங்கள் பேசினால், அவர்கள் (பாஜக) 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *