`வானதி சீனிவாசன் டு அண்ணாமலை வார் ரூம்…’ – கோவை தொகுதிக்கு பாஜக-வில் கடும் போட்டி! | Candidate race in BJP for Coimbatore Lok sabha constituency

Whatsapp Image 2024 02 09 At 08 27 18.jpeg

கோவை நாடாளுமன்றத் தொகுதியை மையமாக வைத்து  நடக்கும் அரசியல் நகர்வுகளால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் சி.பி.எம்… அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்று, சிட்டிங் எம்.பி-யாக உள்ளார். இதனால் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கோவை தொகுதியை மீண்டும் எதிர்பார்த்து பணிகளைத் தொடங்கிவிட்டது.

கோவை பாஜக

கோவை பாஜக

அதேபோல மக்கள் நீதி மய்யமும், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து அதன் தலைவர் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அ.தி.மு.க-விலும் பூத் கமிட்டி, தெருமுனை பிரசாரம் என  தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். ஆனால் தேர்தலில் மற்ற வேட்பாளர்களுடன் மல்லுகட்டுவதற்கு முன்பே, பா.ஜ.க-வில் வேட்பாளருக்கு பெரிய மியூஸிக்கல் சேர் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *