மோடி அரசின் வெள்ளை அறிக்கை Vs காங்கிரஸின் கறுப்பு அறிக்கை – காதிகங்கள் களமாடும் `அறிக்கை’ அரசியல்! | Bjp’s White paper Vs Congress’s Black paper

Whatsapp Image 2024 02 09 At 20 56 45 1 .jpeg

ஆளும் தரப்பு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பா.ஜ.க அரசின் தோல்விகள் குறித்த ‘கறுப்பு அறிக்கை’யை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

டெல்லியில் தனது இல்லத்தில் கறுப்பு அறிக்கையை வெளியிட்டு கார்கே பேசினார். அப்போது, ‘நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது கருத்தைப் பதிவுசெய்யும்போதெல்லாம், தனது தவறுகளை மறைத்துவிடுகிறார். பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

இளைஞர்கள் 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார்.

“பா.ஜ.க-வின் வெள்ளை அறிக்கையும், காங்கிரஸின் கறுப்பு அறிக்கையும், தேர்தல் நேரத்து பிரசார அறிக்கை போலத்தான் தெரிகிறது!” என மாயாவதி விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *