`துரோகிகளான காங்கிரஸ் தலைவர்களைக் கொல்வதற்கு சட்டம் வேண்டும்!’ – கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைப் பேச்சு | BJP Leader Seeks Law To Kill Congress Leaders Who Are “Traitors To India”

Whatsapp Image 2022 02 18 At 10 11 00 Am.jpeg

கர்நாடக மாநிலம், தாவாங்கரே மாவட்டத்தில் புதிய கர்நாடக பா.ஜ.க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் கே.சி ஈஸ்வரப்பா, “இந்தியாவை இரண்டு துண்டுகளாகப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முயல்கின்றனர். குறிப்பாக எம்.பி டி.கே.சுரேஷ் மற்றும் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி ஆகியோர் தேசத் துரோகிகள். அவர்கள் தேசத் துரோகிகள் எனப் பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூற வேண்டும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி  - எம்.பி டி.கே.சுரேஷ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி – எம்.பி டி.கே.சுரேஷ்

மேலும், தேசத் துரோகிகளைச் சுட்டுக் கொல்லும் சட்டம் இயற்ற வேண்டும். தேசத்தைத் துண்டு துண்டாகப் பிரிக்க விரும்புபவர்கள் தேசத் துரோகிகள்” எனப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, கே.எஸ் ஈஸ்வரப்பாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன.

கர்நாடகாவின் பிரபல சமூக ஆர்வலர் கவிதா ரெட்டி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “பொதுவெளியில் கே.எஸ். ஈஸ்வரப்பாவை அடித்துக் கொல்ல வேண்டும் என்று நான் கூறியிருந்தால், பெங்களூரு காவல்துறை என்னைக் கைதுசெய்திருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *