திமுக கூட்டணி: முடிவுக்கு வராத சீட் பகிர்வு… `12-ம் தேதி' – களமிறங்கும் ஸ்டாலின்!

Gazmr23xyaadaad.png

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் தி.மு.க நின்றது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க-வுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 38 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதில் கடந்தமுறை தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் பெரும்பாலானவை அப்படியே தொடர்கிறது.

ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி

அவர்களுடன் கூட்டணி தொடர்பான பேச்சுகளை தி.மு.க தலைமை மேற்கொண்டு வருகிறது. அந்த கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறது. இதில் சீட் பகிர்வை இறுதி செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இதையடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேச முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய இந்தியா கூட்டணி சீனியர்கள் சிலர், “கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை கொடுக்க தி.மு.க தலைமை முயன்று வருவதாகத் தெரிகிறது. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இல்லை. குறிப்பாக காங்கிரஸ் கமிட்டி 12 தொகுதிகளை கேட்கிறது. இதேபோல் கம்யூனிஸ்ட், ம.தி.முக, வி.சி.க தலா 4 தொகுதிகள் என ஒவ்வொரு கட்சியும் கூடுதல் இடங்களில் நிற்க விருப்பம் தெரிவிக்கின்றன. மேலும் தி.மு.க-வினர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் நிற்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டுத்தர, நாங்கள் தயாராக இல்லை.

இந்தியா கூட்டணி

இதனால் தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு குழு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் முதல்வரும் வெளிநாடு சென்றுவிட்டார். தற்போதுதான் அவர் மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார். இதையடுத்து எங்களது கோரிக்கையை அவரிடம், தி.மு.க தொகுதி பங்கீட்டு குழு தெரிவித்திருக்கிறது. எனவே அவர் வரும் 12-ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் நேரடியாக பேச முடிவு செய்திருக்கிறார். இந்த மாதத்துக்குள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *