`சின்னம் விவகாரம்’ – அடம்பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்! – திமுக-வின் முடிவு என்ன? | symbol issue exits in dmk alliance amid lok sabha polls

Whatsapp Image 2023 06 16 At 7 53 26 Pm.jpeg

இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. ம.தி.முக, கொ.ம.தே.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நின்றன. இந்த சூழலில் வரும் தேர்தலில் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், வி.சி.க தரப்பில் பானை சின்னத்திலும், ம.தி.மு.க பம்பரம் சின்னத்திலும் என சொந்த சின்னத்தில் நிற்பதற்கே விரும்புகிறார்கள்.

தி.மு.க கூட்டணிக்குச் செல்ல காய் நகர்த்தும் கமல், டார்ச் லைட் சின்னத்தில்தான் தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்துவிட்டார். இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம்போல சொந்த சின்னத்தில்தான் தேர்தலை சந்திப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். எனவே, இந்த விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கும் தி.மு.க, என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர் விரிவாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *