`எது Fashion Show என நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!’ – மோடியைச் சாடிய சு.வெங்கடேசன் | cpm madurai mp su.venkatesan slams modi for fashion show comment

Whatsapp Image 2024 02 09 At 12 21 36.jpeg

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கறுப்பு நிற ஆடை அணிந்தும், கறுப்புப் பட்டை அணிந்தும் மாநிலங்களவைக்கு வந்திருந்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து வந்தபோது, நாம் ஃபேஷன் ஷோ அணிவகுப்பைப் பார்த்தோம்” எனக் கிண்டல் செய்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில், பல்வேறு விதமான உடைகளில் கலந்துகொண்ட புகைப்படங்களின் தொகுப்பைப் பகிர்ந்து, “ஓய்வு பெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் `மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து வந்தபோது, நாம் ஃபேஷன் ஷோ அணிவகுப்பைப் பார்த்தோம்” எனப் பேசியிருந்தார். நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எது ஃபேஷன் ஷோ என்று…” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *