`இங்கே அரசியலைக் கடந்து சாதிதான் முக்கியம்’- காரைக்குடி அதிமுக பெண் கவுன்சிலர் ‘பகீர்’ குற்றச்சாட்டு | Admk woman councillor complaint against karaikudi municipality chairman

Whatsapp Image 2024 02 09 At 09 04 48.jpeg

அவரின் கணவர் என்னிடம் டிரைவராக இருந்தபோது, நான்தான் அவர்களது திருமணத்துக்கே உதவிசெய்தேன். என்னைப்போய் சாதி பார்ப்பதாகச் சொல்வதெல்லாம், மோசமான தகவல். அவர் என்னிடம் பெரிதாக எதையோ எதிர்பார்த்தார். அது கிடைக்காததால், இது போன்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். அவ்வளவுதான்” என்றார்.

இதையடுத்து, ‘கவுன்சிலருக்கு ஆதரவாக நிற்காதது ஏன்?’ என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனிடம் கேட்டோம். “அப்படியெல்லாம் இல்லை. காரைக்குடி சேர்மனின் அணுகுமுறை சரியில்லை எனத் தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் எங்கள் கவுன்சிலரிடம் அவர் நடந்துகொண்டவிதம் மிகவும் அநாகரிகமானது. தகவல் கேள்விப்பட்டவுடனேயே பள்ளத்தூர் கூட்டத்தில் கண்டித்துப் பேசினோம். அடுத்ததாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். இது கவுன்சிலர் அமுதாவுக்கும் தெரியும்” என்றார்.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன்

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன்

ஆனால், “இன்றுவரை தங்கள் கட்சி பெண் கவுன்சிலருக்காக மாவட்ட அளவில்கூட வேண்டாம், காரைக்குடி நகர அளவில்கூட எந்த ஒரு போராட்டத்தையும் தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கவில்லை” என்கிறார்கள் காரைக்குடி அ.தி.மு.க-வினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *