அண்ணாமலையின் டெல்லி விசிட்; `மெகா கூட்டணி’ – பாஜக மேலிடம் கொடுத்த அசைன்மென்ட்! | reasons behind bjp state president annamalai delhi visit

Gfvurcsxmaaawqj.jpg

டெல்லி சென்ற அண்ணாமலைக்கு பா.ஜ.க தலைமை பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அசைன்மென்ட்டுகளைக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடந்தது என்பது குறித்து பா.ஜ.க உயர்மட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “இந்த டெல்லி பயணம், பிரதமர் மற்றும் நட்டாவை யாத்திரை விழாவுக்கு அழைப்பதற்கானதுதான். அதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க-வுடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், பா.ம.க மற்றும் தே.மு.தி.க உடன் கூட்டணி குறித்துப் பேசப்பட்டுவருவதை டெல்லி மேலிடத்திடம் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

டெல்லியில் அண்ணாமலை

டெல்லியில் அண்ணாமலை

அதேபோல அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பா.ஜ.க வலுவாக இருக்கும் தொகுதிகள் எவை… அங்கு யாரை வேட்பாளராகக் களமிறக்கினால் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தென், வட மாவட்டங்களில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க என்ன திட்டம் என்பது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க கண்டிப்பாக வெற்றிபெறக் கூடிய தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தவேண்டும், அங்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்றும் ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜ.க மெகா கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும், அதற்கான பணிகளைப் பார்க்கச் சொல்லி அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *