India Alliance will win the Elections: K Veeramani | கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: திருச்சியில் கி.வீரமணி

365260 Veeramani.jpg

திருச்சி சிந்தாமணி அருகில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில உரிமைகள் மீதான தாக்குதல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதி பகிர்வில் வஞ்சிப்பது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது,அத்துமீறும் ஆளுநரையும், அடாவடி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர், வைரமணி, மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும். அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒரு சிறு திருத்தம் 35 சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெட்டியை திறந்து பார்த்தால் 40ம் இருக்கும். இந்தியா முழுவதும் 400‌ இருக்கும். கூட்டணி யூகங்கள் எல்லாம் தாண்டி இருக்கும். ஏனென்றால் மக்களுடைய வேதனை அந்த அளவுக்கு இருக்கிறது. தென்னாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏனென்றால் மணிப்பூருக்கே போகாத ஒரு பிரதமரை பெற்று இருக்கிறோம் என மக்கள் எல்லாம் முடிவு செய்து இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்

“எங்கள் பக்கம் வரமுடியாத தேர்தலே நடத்த முடியாத பிரதமர் இருக்கிறார் என காஷ்மீர் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்னாடு பக்கம் வரவே முடியாது, வேண்டுமென்றால் வந்து ஷோ காட்டலாம். அண்ணாமலை வழி அனுப்பும் விழாவாக இருக்கும் அவ்வளவுதான். திமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணி, பதவிக்காக கூட்டணி அல்ல. பலர் சேர்வதற்காக கதவைத் தட்டி வருகின்றனர்.

கருத்து கணிப்புகளை தாண்டிச்சென்று எங்கள் கூட்டணி தேர்தலில் இந்தியா முழுவதும் வென்று ஆட்சி அமைக்கும். ஊடகங்கள்  மாற்றிச் சொன்னாலும் இது நடைமுறையில் இருக்கும். கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும்.

முருகன் தமிழ்நாட்டு அமைச்சராக இருந்தார். கோடான கோடி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு ரூபாய் கூட பெற்று கொடுக்கவில்லை. மோடியிடம் பொங்கல் கொடுத்தால் மட்டும் போதாது அந்த நேரத்திலாவது பணம் வேண்டும் என கேட்டிருக்க வேண்டும். மக்களுக்காக ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருந்தால் அந்த பதவிக்கு தகுதி உள்ளவர். அது செய்யாதவரை தகுதி இல்லாதவர்” எனக் கூறினார். 

“இது ஜாதியை வைத்து அல்ல அவர் திறமையை வைத்தது, செயலின்மையை வைத்து கூறப்படுகின்றது. ஜாதி கலவரத்தை உண்டு செய்கிறார்களா? அடுத்த கட்டம் பாலு என்ன ஜாதி என்று ஆரம்பிப்பார்கள். தமிழகத்தில் உரிமை இருக்கும் போது ஜாதி இருக்காது. இதையெல்லாம் நாங்கள் செய்தோம் என சொல்ல முடியாதவர்கள் ஜாதி என்பதுக்குள் புகுந்துள்ளனர். இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ், மோடி, பிஜேபியினுடைய வித்தை, நோக்கத்தை வேறு பக்கம் திசை திருப்புவார்கள். அதற்கு அடையாளம் தான் இது. இதில் ஜாதி பிரச்சனையே கிடையாது.” என்று அவர் மேலும் கூறினார்.

‘இரண்டு கட்சிகள் தமிழகத்தில் எந்த கூட்டணியிலும் சேராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “ஏலம் போடும் அரசியலை கொஞ்சம் மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Chennai Bomb Threat: அதிர்ச்சி..! சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *