AIADMK Symbol at Risk: OPS Raises Alarm After Palaniswami’s Moves | இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் என ஓபிஎஸ் அணி பகிரங்க எச்சரிக்கை

365157 Admksymbo.jpg

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிலை வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் தயவு செய்து வெயில் காலத்தில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சைதான் என கேபி முனுசாமி போன்றோர் அசிங்கமாக பேசி வருகின்றனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி தற்போது கேபி முனுசாமிக்கு கிடைத்துள்ளது. அது ஓபிஎஸ் போட்ட பிச்சை என்பதை மறந்து விடக்கூடாது. அதிமுக தனது கையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மாயை உருவாக்கி வருகிறார். இதுவரை நீதிமன்றங்கள் போட்ட உத்தரவுகள் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | தென்னாந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு… பிரமிக்கவைக்கும் நூற்றாண்டு கடந்த வரலாறு!

 சிவில் வழக்கு எங்கு நிலுவையில் உள்ளதோ அங்கு சென்று மூன்று வாரத்திற்குள் மனு செய்து அந்த வழக்கை பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் சொல்லி உள்ளது. எங்களுக்கு நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர். கொங்கு பகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரை அண்ணாமலை தற்போது பார்சல் செய்து கொண்டு சென்று விட்டார். நிரந்தரமாக இருப்பவர்களை பற்றி மட்டுமே தற்போது பேச வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் தேர்தல் ஆணையம் இடமே உள்ளது. 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால் எங்களுக்கே  இரட்டை இலை சின்னம் கிடைக்கும். 

அவர்கள் தரப்பும் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் நாங்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டது போல் தனி சின்னத்தில் இருப்பது தொடர்பாக நடவடிக்கையை ஓபிஎஸ் எடுப்பார். கூட்டணி கட்சி சின்னத்தில் நிற்பது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து. நான்கரை ஆண்டு ஆட்சி காலம் நடக்க பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. தற்போது அது முடிந்து விட்டதாக அவர் கூறுகிறார்.  பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த உறவு முடிவும் இல்லை.

தற்போது வரை மக்களவையில் அதிமுகவின் எம்பி ஆகவே ரவீந்திரநாத் செயல்பட்டு வருகிறார். சிஏஏவுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு  கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பது புரியாமல் இருந்து விட்டதா?. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக, பாமக, தேமுதிக, பாமக, தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து கூட்டணி உருவாகும். எடப்பாடி பழனிச்சாமி தனித்து விடப்பட்டு விட்டார்.

பாமக, தேமுதிக அசிங்கப்படுத்திவிட்டு அவர்களை அழைத்தால் எப்படி கூட்டணிக்கு வருவார்கள். ஒரு கட்சி சிதறி போனால் சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும். மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டும் என்பதே மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், ஆகியோர் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க | தலைவர் விஜய் ஆப்சென்ட்… ரகசிய இடத்தில் மீட்டிங் – முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *