`கடமையில் MP எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் சிறந்த எடுத்துக்காட்டு!’ – மோடி புகழாரம் | PM Modi praises former prime minister and congress senior MP Manmohan Singh in parliament

Gridart 20240208 152245084.jpg

நாடாளுமன்றத்தில் ஒரு வாரமாக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மக்களவை, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உரையாற்றிய பிரதமர் மோடி, பா.ஜ.க-வின் இந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் மக்களுக்கு செய்யப்பட்டது என்பதைவிட, அதிகமாக காங்கிரஸை விமர்சித்துவந்தார். குறிப்பாக நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை விமர்சித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர், மத்திய நிதியமைச்சர், முன்னாள் பிரதமர் ஆகிய பதவிகளை அலங்கரித்த காங்கிரஸ் மூத்த எம்.பி மன்மோகன் சிங்கை, நாடாளுமன்றத்தில் மோடி புகழ்ந்திருக்கிறார். முன்னதாக, ஓய்வுபெறும் எம்.பி-க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *